இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பில்கேட்ஸ் பேட்டி

 ஜனாதிபதி போக், முன்னாள் ஜனாதிபதி ருடென்ஸ்டைன், வரவிருக்கும் ஜனாதிபதி ஃபாஸ்ட், ஹார்வர்ட் உறுப்பினர்கள்  கார்ப்பரேஷன் மற்றும் மேற்பார்வையாளர்கள் குழு, ஆசிரியர்களின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் குறிப்பாக, தி  பட்டதாரிகள்:  இதைச் சொல்ல நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கிறேன்: “அப்பா, நான் எப்பொழுதும் உங்களிடம் சொன்னேன்  திரும்பி வந்து என் பட்டத்தைப் பெறு.  இந்த சரியான நேரத்தில் கௌரவிக்கப்பட்ட ஹார்வர்டுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.  நான் அடுத்த வருடம் என் வேலையை மாற்றிக்கொள்கிறேன்… இறுதியாக ஒரு கல்லூரி இருந்தால் நன்றாக இருக்கும்  எனது விண்ணப்பத்தில் பட்டம்.  உங்கள் பட்டப்படிப்புகளுக்கு மிகவும் நேரடியான பாதையை எடுத்துக்கொண்டதற்காக இன்று பட்டதாரிகளை நான் பாராட்டுகிறேன்.  என் பங்கிற்கு, கிரிம்சன் என்னை "ஹார்வர்டின் மிகவும் வெற்றிகரமானவர் என்று அழைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்  கைவிடுதல்."  அது என்னை எனது சொந்த சிறப்பு வகுப்பின் வல்லுநராக ஆக்குகிறது என்று நினைக்கிறேன் ... நான் எல்லோருக்கும் சிறந்ததைச் செய்தேன்  யார் தோல்வியடைந்தார்.  ஆனால் நான் ஸ்டீவ் பால்மரை

ஊடலுவகை

  133. ஊடலுவகை குறள்  1321: இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு மு.வ உரை : அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது. சாலமன் பாப்பையா உரை : அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல். கலைஞர் உரை : எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது குறள்  1322: ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும் மு.வ உரை : ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும். சாலமன் பாப்பையா உரை : ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும். கலைஞர் உரை : காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும் குறள்  1323: புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து மு.வ உரை : நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற

புலவி நுணுக்கம்

  132. புலவி நுணுக்கம் குறள்  1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு மு.வ உரை : பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். சாலமன் பாப்பையா உரை : பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன். கலைஞர் உரை : பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன் குறள்  1312: ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து மு.வ உரை : காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். சாலமன் பாப்பையா உரை : நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்) கலைஞர் உரை : ஊடல் கொண்டிருந்தபோது

புலவி

  131. புலவி குறள்  1301: புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது மு.வ உரை : ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக. சாலமன் பாப்பையா உரை : நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய். கலைஞர் உரை : ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக குறள்  1302: உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் மு.வ உரை : உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது. சாலமன் பாப்பையா உரை : உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும். கலைஞர் உரை : ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு

நெஞ்சொடு புலத்தல்

  130. நெஞ்சொடு புலத்தல் குறள்  1291: அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது மு.வ உரை : நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்? சாலமன் பாப்பையா உரை : நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன? கலைஞர் உரை : நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்? குறள்  1292: உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு மு.வ உரை : என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே! சாலமன் பாப்பையா உரை : என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்! கலைஞர் உரை : நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின

புணர்ச்சி விதும்பல்

  129. புணர்ச்சி விதும்பல் குறள்  1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு மு.வ உரை : நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு சாலமன் பாப்பையா உரை : நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு. கலைஞர் உரை : மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம் குறள்  1282: தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் மு.வ உரை : காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும். சாலமன் பாப்பையா உரை : பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும். கலைஞர் உரை : பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும் குறள்  1283: பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண் மு.வ உரை : என்னை விரும்